Tuesday, November 16, 2010

பெண்ணாய் உணரும் தருணங்கள்

பெண்ணாய் உணரும் தருணங்கள்

சின்னஞ்சிறுவயதில்
இன்னொரு குழந்தையை
நிர்வாணமாய்ப் பார்க்க நேர்ந்து
விவரம் கேட்ட போதும்

குசுகுசுப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த
பள்ளித்தோழிகளுடன்
கூட்டுச் சேர்ந்த போதும்

சேர்ந்து விளையாட
தடை விதிக்கப் பட்ட போதும்
எனத் தொடர்ந்து

பருவமெய்தி
வெறுத்திருந்த போதும்
விளக்கம் தரப்பட்டு
தளர்ந்திருந்த போதும்

இன்னும்
தனிவழி போக
தயங்கிய போதும்
தைரியம் வளர்த்து
தனிநடந்த போதும்

பழக்கிய பெண்ணுடை
பற்பல சமயங்களில்
சிற்சிறு பணிகளில்
குறுக்கிட்டு தடங்கல்கள்
விளைவித்த போதும்

பெண்ணென்பதாலேயே
என் சாதாரணச் செயல்கள்
அசாதாரணமாய்
அறிவிக்கப் பட்ட போதும்

பெண்ணென்பதாலேயே
என் முயற்சி முனைப்புகள்
மறுக்கப்பட்ட போதும்

மறுப்புகள் தாண்டி
ஜெயித்தெழுந்த போதும்

காதல் கடிதங்களின்
கற்பனை வர்ணனைகள்
சலிப்பைத் தந்து
சங்கடப் படுத்திய போதும்

கனிந்த காதலில்
களித்திருக்கையிலும்
தாய்மையை என்னில்
தரித்திருக்கையிலும்

நான் பெண்ணென்றுணர்ந்தோ
உணர்த்தப்பட்டோ
வளர்ந்து வந்திருக்கிறேன்

மற்றபடி
நானொரு பெண்ணென்ற நினைவை
நெஞ்சில் இருத்தி
நித்தமும் உழன்று
தவித்ததில்லை

ஆனாலும்
தன்னுணர்வோடும்
தப்பித்தல்களோ
தயக்கமோ இன்றியும்
தாழ்வுணச்சிகள் ஏதுமின்றியும்
கெஞ்சி நிற்காமலும்
இவர்களால் வகுக்கப்பட்டிருக்கும்
வரையரைகளைத் தாண்டியும்
நான் 'பெண்' என்பதை உணர்ந்தே
வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

தேவதைக் காலம்

தேவதைக் காலம்



உலக அழகிப் போட்டிகளை

நான் பார்ப்பதில்லை,

உலகத்தை அழகாக்குபவளே

நீதான் என

தெரிந்த பிறகு..


எதைக் கேட்டாலும்

கொடுப்பது மட்டும்

தேவதை அல்ல..

முத்தம் கேட்கும் போதெல்லாம்

"முடியாது போடா" சொல்லும்

நீயும் தேவதைதான்..


நிலவில் வாழ முடியுமா

என தெரியாது..

ஆனால்

நிலவுடன் வாழ முடியுமென

உன்னைக் காதலித்த

நொடியிலிருந்து தெரியும்..


உலகத்தின் காலம்

'கிருத்துவுக்கு முன்'',

'கிருத்துவுக்குப் பின்' என

பிரிக்கப்பட்டுள்ளது போல்,

என் காலம்,


'தேவதைக்கு முன்',

'தேவதைக்குப் பின்' என

பிரிக்கப்பட்டுள்ளது..

மரணமும் காதலும்

காதலில் இன்பமும் துன்பமும்
இணைபிரியா உறவுகள்!

இன்பமடையும் பொழுது
இறுமாப்புக் கொள்ளாதெ!


மரணமும் காதலும்


துன்பம் வரும் வேளையில்
துவண்டுவிடாதே!

துணிந்து நில்,
துயரம் துவண்டுவிடும்!

காதலுக்கு மருந்து
மற்றொரு காதல்!

காதலை தேடிச் செல்லாதே!
தேடிவரும் காதலை ஏற்றுக்கொள்!

மரணமும் காதலும்


இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணேர் சிந்தும் .........

காமத்தின் எல்லை வரை..........

காமத்தின் எல்லை வரை..........

என் சிகையில்...
உன் முகம் சிக்கிவிட...
உணர்வலைகள் உயிர் பெற்றுவிடும்.
உதடுகளின் ஈரம்
கண்பார்வை மேல் விழ...
மறு ஜென்மம் மலர்ந்து விடும்...!!

ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிமையறை
படுக்கை அறை தான்.
பந்த பாசம் பார்வையில்...
பட்ட இன்பம் போர்வையில்...
தெய்வீக வாசனை அவன் வியர்வையில்...
தென்றலாய் மாறியது அவள் மேனியில்...!!

இருட்டில் முகம் நடமாட...
படுக்கும் முறை நிலை தடுமாற...
மூச்சோடு மூச்சு பேசி விளையாட...
முளைத்தது மூன்றாம் பிறை.
வரம்புக்கு மீறிய ஆசை.
வந்தது கட்டிலில் ஓசை...!!

கண் மூடிக் கண்ட சுகங்கள்...
கை கால் கண்ட நியங்கள்...
காலத்தால் அழியாத நினைவுகள்.
கையணை தலையணையாய் மாறிவிட...
தலையணை தடங்களாய் மாறிவிடும்.
உடலும் உயிரும் உலாவுமிடத்தில்.
உடைகள் தடைகளாய் மாறிவிடும்...!!

பெண் உள்ளம் பேசிவிட...
ஆண் உள்ளம் மௌனமாகிவிடும்.
இது தான் தலையணை மந்திரமா...?
தவிக்க முடியாத யந்திரமா...?
அவள் மார்புக்கு மத்தியில்...
புதைக்கப் பட்ட அவன் முகம்
பூரிப்படைந்த காட்சி - என்
கண்கள் மட்டும் தான் சாட்சி...!!

நாவால் நனைந்த உன் மேனி...
மூச்சுக் காற்றால் உலர்ந்து போனாய் நீ...
பதுமையாய் வளர்த்த பற்கள்...
பௌவியமாய் கடித்த...
சிவந்த கன்னங்கள்.
சில் என்று ஏறிய உணர்வுகள்...
சீறியது இன்பத் துளிகளாய்...!!

தடைகளை உடைத்து வந்த...
சுகந்திரப் புறாவாய்...
அடைக்கலமாய்த் தாவியது நெஞ்சறையில்.
இதயத் துடிப்பின் ஓசை...
இளமைப் பருவத்தின் ஆசை...
இரண்டும் பொக்குள் கொடி உறவுகள்...!!

காதோரம் கதை கேட்க...
காத்திருந்தேன் சில நாட்கள். - என்
பூவோடு விளையாட...
பூ முடிந்திருந்தேன் சடையோடு.
தேனோடு உறவாட...
தேர்ச்சி பெற்றேன் உன்னோடு.
மானோடு விளையாட...
மாட்சிமை பெற்றேன் தாயாக.
சீரோடு வளப்பேன்....
சிந்தனையில் சிதறாமல்...!!!

சின்னச் சின்னக் கவிதைகள்

சின்னச் சின்னக் கவிதைகள்

Post

1. காதலி

கனவினைக் கொல்
நீ
உத்தரவாய்ச் சொல்லி
உதறிப் போனாய்

நான்
இரவு இறக்கட்டும் - என
காத்திருக்கிறேன்

என் காதலியே...
ஒன்றோடும்
ஒட்டாது கிடக்கின்ற
வானத்துக்கு
வலி தெரியாது
உன்னைப் போல

2. இன்டர்வியூ

போட்டோ பூவில்
மோதியது பட்டாம்பூச்சி
வாய்ப்பற்ற இளைஞன்


3. மரம்

தன் நிழலில்
பரம் பேசப்பட்டது
வேர் சிரித்தது

என்னில் நீ...
கிணற்றுச் சுவரின்
இடுக்கு மண்ணில்
அடமாய் வளரும்
செடி

4. மன்னிக்கவும்

இயந்திரத்தின்
தலைமையில்
மலர்களின் ஊர்வலம்
மல்லாந்து கிடக்கிறது - என்
கவிதைக் காலம்

5. சந்தர்ப்பவாதி

பொட்டலத்திலிருந்து
எடுக்கையில்
தவறி விழுந்தது
காரத்துண்டு
பாய்ந்தது காக்கை
சட்டென பாடினான்
காக்கை குருவி
எங்கள் சாதி

6. தொலைந்தது...

வாழ்க்கைச் சந்தையில்
எங்கோ தொலைந்து போனது
என் அமைதியான முகம்

முன்பே தெரிந்திருந்தால்
புகைப்படம் எடுத்து
வைத்திருப்பேன்

சின்னச் சின்னக் கவிதைகள் Post

சின்னச் சின்னக் கவிதைகள்

Post

1. காதலி

கனவினைக் கொல்
நீ
உத்தரவாய்ச் சொல்லி
உதறிப் போனாய்

நான்
இரவு இறக்கட்டும் - என
காத்திருக்கிறேன்

என் காதலியே...
ஒன்றோடும்
ஒட்டாது கிடக்கின்ற
வானத்துக்கு
வலி தெரியாது
உன்னைப் போல

2. இன்டர்வியூ

போட்டோ பூவில்
மோதியது பட்டாம்பூச்சி
வாய்ப்பற்ற இளைஞன்


3. மரம்

தன் நிழலில்
பரம் பேசப்பட்டது
வேர் சிரித்தது

என்னில் நீ...
கிணற்றுச் சுவரின்
இடுக்கு மண்ணில்
அடமாய் வளரும்
செடி

4. மன்னிக்கவும்

இயந்திரத்தின்
தலைமையில்
மலர்களின் ஊர்வலம்
மல்லாந்து கிடக்கிறது - என்
கவிதைக் காலம்

5. சந்தர்ப்பவாதி

பொட்டலத்திலிருந்து
எடுக்கையில்
தவறி விழுந்தது
காரத்துண்டு
பாய்ந்தது காக்கை
சட்டென பாடினான்
காக்கை குருவி
எங்கள் சாதி

6. தொலைந்தது...

வாழ்க்கைச் சந்தையில்
எங்கோ தொலைந்து போனது
என் அமைதியான முகம்

முன்பே தெரிந்திருந்தால்
புகைப்படம் எடுத்து
வைத்திருப்பேன்

புதுக்கவிதை

புதுக்கவிதை

ஹைக்கூ

என்ன வேண்டுதலோ
மரங்களுக்கு
மொட்டை!
இலையுதிர் காலம்...



நீதி...!


ஜாதி பார்த்து
மணம் வீசுவதில்லை
பிறகேன்..
பேர் வைத்து
முழம் போடுகிறாய்..?
கூச்சலிட்டது
கூடையில் இருந்த
ஜாதிமல்லி...!



மீட்பு


நீண்ட இடைவெளிக்குப்
பிறகான
நம் சந்திப்பு
மீட்டுக் கொடுத்தது
உனக்குள் தொலைந்த
என்னை!


சொல்லு

உன் பெயரை
மெல்லச் சொன்ன உடன்
உன் தலை கீழ் நோக்கி
வளைந்து கொள்வது
ஏன்? நீ...
சிறு காற்றுக்கும்
வளையும் நாணலா?
அல்லது மெல்லிய சொல்லுக்கும்
குழையும் நாணமா?


***

நியாயமா?

உன்
பார்வையைத்தானே
கடன் வாங்கினேன்
அதற்காக
என்
இதயத்தை
எடுத்துக் கொண்டாயா
வட்டியாக..?



***

எட்டாக்கனி


உன் வீட்டு
மரத்திலிருந்த
ஏழு கனிகள்
பறித்து விட்டேன்..
மரத்திலிருந்து
உன்னைப் பார்த்தேன்
நீதான்
`எட்டாக்கனி'
ஆச்சே..
வெளியே வா!

* தூக்கத்தை தூக்கி
தூர வைத்தேன்
விடியல் தெரிந்தது!

* ஏக்கத்தை வழித்து
துடைத்து எறிந்தேன்
உற்சாகம் பிறந்தது!

* குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

* திட்டித் தீர்ப்பதை
விட்டொழித்தேன்
பாராட்டுக்கள் குவிந்தது

* வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது!

அப்படியா

கனவுகள் மோதிய
விபத்தில்
வெளிக்காயமில்லை
உள் காயம்
காதல்!


***

அடடே

வாசலில்
கையேந்திய
பிச்சைக்காரனை
அலட்சியத்தோடு
பார்த்த பக்தன்,
கடவுளின் முன்
கையேந்திய படி..!



அடடே!


`வீட்டிற்குள் கூட
மழை நீர் சேகரிப்பு'
-ஏழையின் குடிசை!'

இந்த நாள் இனிய நாள்

இந்த நாள் இனிய நாள்


நேற்று என்பது இறந்த காலம்
அது என்றும் திரும்பாதது
நாளை என்பது எதிர்காலம்
அது என்றும் புதிரானது
இன்று என்பது நிகழ்காலம்
அது என்றும் இனிமையானது
நேற்றைய தோல்விகளை கண்டு
இன்று தளர்ந்து விடாதே
நாளைய போட்டிகளை கண்டு
இன்று மிரண்டு விடாதே
இன்றைய தினம் உன்னுடையது
என்றும் இதை மறவாதே
நேற்றைய அனுபவங்களை கொண்டு
நாளைய போட்டிகளை எதிர்கொள்ள
இன்றே நீ உழைத்திட்டால்
இந்த நாள் இனிய நாள்தான்

காதலும்..... காமமும்!

காதலும்..... காமமும்!


வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்
முதல் முறை என் காலடியில்
தரிசனம் தந்த காவல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
வலை போட்டு விட்டாய்.

கடுங் குளிரில்.....
காம நிலையில்
முதல் முறை என் போர்வைக்குள்
ஆட்சி செய்த அதிபதியே - என்
முழு இதயத்தையும்
சிறைப் பிடித்து விட்டாய்.

கடற்கரை மண்ணில்.....
கண்ட புதுமை
முதல் முறை என் பார்வையில்
பாதம் பதித்திட்ட பாவையே - என்
முழு இதயத்தையும்
திருடி விட்டாய்.

நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது

நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது

நான் ஏன் காதலிக்கவில்லை! ! !

காதலிக்க தெரியாமலா...??
இல்லை இல்லை .....
கலை உலகம் கற்றுக்கொடுத்துள்ளது ...
கலை படைப்புகளில்..
முக்கால் வாசி..
காதல் பாடங்களே...!!

எனக்கேற்றவள் கிடைக்காமலா...???
இல்லை இல்லை ...
எனக்கேற்ற ஒரு சிலரையேனும்
நான் கடந்திருப்பேன்.

யாருக்கும் என்னை பிடிக்காமலா...??
இல்லை இல்லை....
என்னைப் பிடித்த பலரை
நான் கடந்திருக்கிறேன் ...

பின் ஏன்..??
தோல்வியின் அச்சமோ..?
இருக்கலாம்..

உண்மை காதல் - வெற்றி அடையும்
என்பது என் எண்ணம்...!!
தோற்றால் ., காதல் பொய் ஆகுமோ ...?
எந்தக் கவிஞரும் அப்படி பாடவில்லை...!

பின் ஏன்...?
இம் உண்மை உணர்தேன்..

காதலை பெற்றோர் ஏற்பார்களோ..?
இல்லையேல் நாம் எதிர்ப்போமோ...??

எதிர்க்கவும் முடியாது..
பிரியவும் முடியாது..
நினைத்தாலே ., அய்யகோ .., அது அவஸ்தை..
அதனால் தானோ நான் காதலிக்க வில்லை...???

செறுப்பு இல்லாமல்

செறுப்பு இல்லாமல்

நீ செல்லும் வீதிகளில் நான் உலாவருகிறேன்
உன் காலடி தடத்தில் என் பாதம் படாதா என்று
உன் வீட்டிற்கு முன்பே காத்துகிடந்தேன்
நீ விட்டு சென்ற சுவாசம் என் மீது படாதா என்று
உன்னை பின் தொடர்வதால் செருப்பை காட்டினாய்
அதன் நிலமைகன்டு உன் ஏழ்மையை புரிந்துகொன்டேன்
இன்று காதலை கூற கேவிலில் காத்திருக்கிறேன்
அங்குதானே நீ செருப்பில்லாமல் வருவாய் என?


சிலையாக நின்று கொண்டே...

சிலையாக நின்று கொண்டே...

நீ உயர்ந்தவன் என்று எண்ணாமல் இருக்க தினம் தலைவலி வயிற்றுவலி கொடுத்தேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

ஆழிபேரலையில் என் கோபத்தை காட்டி புகம்பத்தால் உன் படைப்புகளை அசைத்தேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

நீ தீர்த்துவிட்டதாக நினைத்த விடுகதைகளின் விடையை தினமும் மாற்றினேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

புதனுக்கும் சுக்கரனுக்கும் செல்லும் மனிதா உன் மூக்கு சளிக்கு விடை கிடைத்தா, ஆனால்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

ஆண்-பெண் படைத்து அண்டத்தையும் படைத்து இயற்கை இயற்றினேன்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

பிறப்பின் ரகசியம் உனக்கு தெரியவில்லை உன் இறப்பின் ரகசியமும் உனக்கு தெரியவில்லை
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

பயம், கோபம், ஏக்கம், துக்கம், பேராசை, பொறாமை இதையெல்லாம் எப்படி பெற்றாய்
-இன்னும் என்னை சிலையாகவே நினைக்கிறாய்

இறுமாப்பில் வாழும் மனிதா உன் பாட்டானாரும் கூட என்னை அறியவில்லை, ஆனால்
-இன்னும் என்னை சிலையாவே நினைக்கிறாய்

நீ வருவாய் போவாய் உன் பிள்ளைகள் வந்து போகும் நான் இங்கு காண்பேன் இவையெல்லாம்
-சிலையாகவே நின்று கொண்டே

சிலையாக நின்றேன்

சிலையாக நின்றேன்

ஓதுவர் தட்டில் விழுந்த காசை வேட்டியில் மடித்ததை பார்த்தும்
-சிலையாக நின்றேன்
கொள்ளை அடித்த பணத்தை உண்டியலில் போட்டு என்னை பங்காளியாக்கியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
1500 ரூபாய் கொடுத்து அர்ச்சனை சீட்டுவாங்கி வந்து பண பலத்தை என்னிடம் காட்டியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
48 மணி நேரம் கால் கடுக்க என்னை காண நின்றிருந்த என் நிஜ பக்தனை கண்டும்
-சிலையாக நின்றேன்
கூட்டத்தோடு கூட்டமாக என்னை காண வந்த பெண்களை உரசியவர்களை கண்டும்
-சிலையாக நின்றேன்
என் படத்தை விற்று காசு செய்து என் பெயர் சொல்லி பணம் பார்த்தவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் பல பெயர்களில் உலகில் வலம் வர என்னை வைத்து என்னில் யார் பெரியவன் என்று சண்டையிடுவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னுள் அவனா அவனுள் நானா என்று என்னையே பகடையாக்கிய மனிதரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னை போற்றி என் பக்தர் எழுதிய கதைகளை என் முன் கொச்சைபடுத்தி பேசும் நாக்குள்ளவரை கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் இப்படித்தான் நான் இப்படிச் செய்வபவன் தான் என்று எனக்கே வரைமுறை எழுதியவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் சிலையாக நிற்கலாமா உருவமுள்ளவனா அற்றவனா என்று அவரவர் விதி விதிப்பதைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என் சிலைகளில் சிலவை சக்தி வாய்ந்ததென்றும் சிலவை விளக்கேற்ற கூட அருகதை இல்லாதவை என்றும் ஒதுக்கிய மனிதனை கண்டும்
-சிலையாகவே நான் நின்றேன்

எல்லாமே நீ! என் இனியவளே!

எல்லாமே நீ! என் இனியவளே!


இயற்கைத் தேன் தரும்
அதிசய மலர் நீ

என்னை உருக்கி உனக்குள்
கருவாக்கும் ஒரு புதிய படைப்பும் நீ

பூவிற்கெல்லாம் நாணம் கொடுக்கும்
அழகிய பூமகள் நீ

பல லட்சம் தாரகைகளிற்கு
ஒளிகொடுக்கும் அழகிய வெண்ணிலா நீ

செல்லமாய் வருடிடும் தென்றலும் நீ
இயற்கையின் சீற்றம் நீ
இளமையின் ரகசியம் நீ
இரவின் ஓளி மழை நீ
என்தன் இரகசிய உணர்ச்சியும் நீ
என் கனவின் முகவரி நீ

எனக்குள் விளைந்து
உன்னை வெளிச்சமாக்கும்
வித்தியாசமான தீபம் நீ

இரவுகளெல்லாம் எனை வாட்ட
நினைவுகளெல்லாம் என்னோடு தர்க்கம் புரிய
கனவுக்கு அழைப்பிதழ்கொடுத்து
உன்னுடன் தினம் தினம் சல்லாபம் செய்கின்றேனடி !
இப்பாலைவனபூமியில் என் குளிர்காற்று நீ

வினாவாகும் என் பருவத்தின் விடை நீ
விரல் தொட்டால் விரிகின்ற பெண் பூ நீ
தேன் குடிக்க இதழ்தந்த பாரியும் நீ
என்னை காமனாக்கும் காரிகையும் நீ
எல்லாமே நீ எதிலும் நீ
என் கவிதையின் கருப்பொருள் நீ
என் காதலிற்கு உயிர் கொடுத்தவளும் நீ

எல்லாமே நீ! என் இனியவளே!

கலங்கிய மனதின் கேள்வி

பட்டுப் புடவையும் வைரமும் அணிந்த உடல்
இன்று மார்ச்சுவரியில் தன்னந்தனியே கிடந்த அவலம்
முகம் போர்த்திய வெள்ளைத் துணியை
என் கைகள் விடுவித்து அதனைப் பார்த்த போதுதான்
நன்கு உறைத்தது அவள்’ ‘அதுவான உண்மையை

அறுபது வயது பெரியக் குழந்தை ஒன்று
சாயத் தோளின்றி பரிதவித்த கோலம்
உருவமற்ற உயிர் எங்கு பறந்து சென்றதோ
என்று புரியாமல் அரற்றிய அந்த வேதனை
என்னை நிலைகுலைய வைத்ததென்னவோ உண்மை

இறைவா இது என்ன விளையாட்டு -

பிறப்பையும் இறப்பையும் கொடுத்த நீ
பாசத்தையும் அன்பையும் ஏன் தந்தாய்
இளமையும் முதுமையும் அளித்த நீ
காதலையும் நேசத்தையும் ஏன் திணித்தாய்

உறவையும் பந்தத்தையும் தந்த நீ
ஆசைகளையும் எதிப்பார்ப்பையும் ஏன் அளித்தாய்
அழகையும் அறிவையும் படைத்த நீ
ஏக்கத்தையும் பொறாமையும் ஏன் தந்தாய்

ஒன்று மட்டும் கேட்க விரும்புகிறேன் -

வெற்றியின் பின் ஓடும் மனிதனே
இறப்பை வெற்றிக் கொள்ள முடியுமோ
பிறர் வாழ்வை விலைக்கு வாங்கும் மனிதனே
உன் வாழ்வுதான் நிலைத்திருக்க முடியுமோ

நான்கு வரிக் கவிதைகள்


நான்கு வரிக் கவிதைகள்

Post

அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான்
அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான்
அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான்
அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா



கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது
சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது
பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான்
துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது




ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது
ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார்
கோவிலுக்கு போனால் நீ ஆத்திக நாய் - பகுத்தறிவு எனக்கு
சாய்பாபாவுக்கு பாராட்டு விழா நேரமாச்சு போக



அண்ணி சீரியலில் அம்பிகா எதிர்த்தவீட்டு ராமோட ஓடிப்போயிட்டா
சித்தி சீரியலில் சிந்துஜா ரவியை வெச்சிருக்கா
மலர்கள் சீரியலில் மாளவிகா மதனோட கள்ளத் தொடர்பு
கொஞ்சம் ரிக்கார்ட் பண்ணுங்க சுமங்கலி பூஜைக்கு நேரமாச்சு


நான்கு வரிக் கவிதைகள்

Post

கதை எழுதுவாரு அண்ணாதுரை, வசனம் எழுதுவாரு கலைஞரு
ராஜபாட்டைக்கு ஒரு எம்ஜிஆர், ஹீரோயினியா ஜெயலலிதா
நகைச்சுவை நடிகரு நம்ம சோ, ரீலிஸ் பண்றவரு வீரப்பன்
ஸ்டைலுவுட விசயகாந்து, சே, கூத்தா போச்சுடோய் அரசியலு



பசிக்கிறது சாப்பாடு போடுங்கய்யா சொன்னவனை ஒன்னும் இல்லைப்பா என்று சொல்லி ஓட்டினேன்
கடைதெரு போகும் வழியில் ஆட்டோக்காரனிடம் 5 ரூபாய்கக்கு அரை மணி சண்டை போட்டேன்
ஓட்டலில் சர்வர் கொண்ட வந்த பில்லை டிப்ஸ் மிச்சப்படுத்த எடுத்து சென்று கல்லாவில் பணம் கட்டினேன்
ஓடிச்சென்று போத்தீஸில் கைக்குட்டையை அவன் போட்ட 150 விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி வந்தேன்




ஓட்டுப் போட்டு உதை வாங்கி ஓடிவந்து
நாட்டு வெடிகுண்டை வைத்து நாட்டுப்பற்றை காட்டி
நாலு நாள் ஆஸ்பத்திரியில் அவதி பட்டு
மறுதேர்தல் அறிவிப்பை பார்த்து காயத்தை தடவிக்கொண்டேன்




திமுகவை சாடினேன் அதிமுகவை ஏசினேன்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசவு செய்தேன்
பொறுப்பற்ற மந்திரிகளை பொரிந்து தள்ளினேன்
தேர்தல் நாளு லீவு தானே என்று படுத்து தூங்கினேன்
நிறுவனர்
நான்கு வரிக் கவிதைகள்




குமுதத்திற்கு நமீதாவின் இடுப்பு மட்டும் கண்ணுக்கு படுகிறது
ஆனந்த விகடனோ கருணாநிதியின் மஞ்சள் துண்டை மட்டும் எடுக்கிறது
கல்கியோ பதினெட்டாம் நூற்றாண்டை விட்டு வெளியே வர மறுக்கிறது
திரும்பி வந்த கதைகளால் என் வீட்டு கொல்லைபுறம் பெருக்கிறது



மட்டமான சாராயத்தை குடித்த வயிறு எரிந்து மல்லாக்கப்படுத்தேன்
சுருட்டு பீடியும் புகைத்து வாய் நாறிப்போனேன்
விளக்கு வைத்து தோரணம் கட்டி போஸ்டர் ஒட்டி பிசுபிசுத்துப்போன கைகள்
என் கைபட்டதும் டெட்டாலால் கழுவும் தலைவனுக்காக தீக்குளிக்க போகிறேன்




ராகுகாலம் பார்த்து வீட்டிலிருந்து கிளம்பி பரீட்சைக்காக
வழியில் இருந்த முருகன் கோயிலில் வணக்கம் போட்டு
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தாளில் ஓம் போட்டு
மதிப்பெண்ணை பார்த்தால், சே, சரியான ராகுகாலத்தில் பேப்பர் திருத்தினாங்கப்பா



அன்பை அன்னைக்காக கொடுத்தேன் அறிவை தந்தைக்கு சமர்ப்பணம் செய்தேன்
பாசத்தை சகோதரனுக்கு கொடுத்தேன் நேசத்தை சகோதரிக்கு கொடுத்தேன்
விசுவாசத்தை நண்பர்களுக்கு கொடுத்தேன் காதலை காதலிக்கு கொடுத்தேன்
எனக்கென்று வரும்போது கொடுக்க ஏதும் இல்லை, அநாதையாய் நின்றேன்




மேளம் கொட்டுபவனிடம் சென்று ஒலி மாசு பற்றி பேசினேன்
செருப்பு தைப்பவனிடம் சென்று பசு வதை பற்றி பேசினேன்
ஊமையனை பேச்சாளனாக சொல்லி, குருடனுக்கு கண்ணாடியும் வாங்கினேன்
அரசியல்வாதியை நேர்மையாக சொன்னேன், கீழ்பாக்கத்தில் இருக்கிறேன்

சுரேஷ்

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!




ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?


காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post


மரணத்தின் வாசல்படி
காதல்!
இறந்தாலும் மீண்டும்
பிறப்பது அதன் அம்சம்!
கொஞ்சம் கொடு
என் மனதின்
சினுங்கலுக்கு அளவில்லை.
கொஞ்சம் காதல்
இருந்தால் கொத்துவிட்டுப் போ!



காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வண்ணங்களாகத்
தோன்றுகிறது
உன் புன்னகை!

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வண்ண
உடையாக உடுத்த
எனக்கு ஏற்றவை அவை!



காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post


பகலில் சூரியனும்
இரவில் நிலவும்
வெயிலில் மரமும்
பசியில் நதியும்
பழகப் பார்வைகளும்
பறுக முத்தங்களும்
படுக்க மடியும்
பார்க்க விழிகளும்
பதுங்க குடிசையும்
போதுமானது
நம் காதலுக்கு!
அருகில் நீயிருக்கையில்
வேறு தேவையென்ன!


காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

கடற்கரை மணலில்
வீடுகட்டி விளையாடும்
பிள்ளையாகத் தோன்றுகிறாய்.
தவறுசெய்து என்முன்
நீ நிற்கும்போது!


புன்னகை இல்லா காதல்
இருந்தும் பயனில்லை.
புன்னகையோடு தொடர்ந்த
காதலை,
புன்னகையோடு ரசிப்போம்!
புன்னகையோடு முடிப்போம்!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

சில நேரங்களை
நினைப்பதில்லை.
சில நேரங்களை
மறுப்பதில்லை.
சில நேரங்களை
கவனிப்பதில்லை.
சில நேரங்களை மட்டும்
நினைக்க நினைக்க
இனிக்கும்!
அது பிடித்த உன்
குரலை கேட்பது!

எல்லா உறவுகளும்
ஏதோ ஒருவகையில்
பிறப்பால் தோன்றுகிறது!
காதல் மட்டுமே
மனதால் தோன்றும் உறவு!


காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

மலைகளின் நடுவில்
நீரூற்றுப் போல
என் இமைகளின்
நடுவில் நகருது
உன் நதி!


உன் அன்பைபெற
என் காதலைக்கொடுத்தேன்!
என் அன்பைபெற
உன் காதலைக்கொடுத்தாய்!
இப்படி அன்பால்
வாழ்வதுதான் காதல்!
வளர்வதுதான் காதல்!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

நீ சிரிக்கும் வேளையில் சிரிக்கிறது,
எனது உதடுகளும்
நீ அழுகும் வேளையில் அழுகிறது,
எனது விழிகளும்,
நீ நினைப்பதைச் செய்யும்
ரோபோ ஆகிவிட்டேன்!
நீ ஆளப்பிறந்தவள்!
நான் ஆடப்பிறந்தவன்!


அன்பை வெளிபடுத்த
துன்பத்தைத் தவிர
வேறு நல்லசந்தர்ப்பம் இல்லை.
உன் அன்பை அழகாக
வெளிபடுத்துகிறாய்!
எனது மனக்கவலையில்!



காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

கட்டுக்குள் அடங்காதது
நம்காதல் மட்டுமல்ல
நம்கடமையும் தான்!
காதலுக்கு காதலன்
சிலைகளுக்கு சிற்பி!
பானைகளுக்கு குயவன்!
மரங்களுக்கு தச்சர்!
அறிவிற்கு மேதை!
உலகிற்கு கடவுள்!
காதலுக்கு காதலன்!


என் கவலையை
மாற்றிக்கொள்ள
ஒரேவழி
உன் துணைமட்டுமே!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post

எதையும் விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
உன்மனதினை
நினைக்கையில் பொறாமையாக
உள்ளது.
எனக்கு அமையவில்லையே
என்று.


காதல் அழகானதுதான்
காதலர்கள் அதை
அழகு படுத்தும்வரை!
காத்திரு அந்த அழகை
அரங்கேற்ற!