Thursday, October 14, 2010

கவிதைகள்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
அப்புகுட்டி



உலகில் வாழ வேண்டும் !!

சாகும் வரை அல்ல !!...

உங்களை வெறுத்தவர்கள்

வாழ்த்தும் வரை !!!...


களத்துமேட்டு காதல்!

அடித்து தூற்றினார்கள்
ஊர் முழுக்க...
களத்துமேட்டு காதல்!



!!!பெண்ணே!!!

பெண்ணே நீ!!
பட்டாம்பூச்சி பிடிக்காதே!
ஏனெனில்! உன் கைகளின்
வர்ணம் பட்டு - அந்த
பட்டாம்பூச்சி அழகாகிவிடும்!


பெண்ணே நீ!!
கூந்தலில் பூச்சூடாதே!
ஏனெனில்! உன் கூந்தலின்
வாசம்பட்டு - அந்த
பூவுக்கு வாசம் வந்துவிடும்!!:

பணம் ............

முடங்கி கிடந்தால்
என்னை அடைவது கடினம்
ஊனத்தைக் காட்டி
கையேந்தி பிச்சைகேட்டு
என்னை இழிவுபடுத்தாதே
உன் உழைப்பைகொண்டு
உரிமையோடு
என்னைத் தேடிக்கொள்
உனக்கும் உறவுக்கும்
பேதமின்றி அளவோடுசெலவிடு
ஏந்தும் கரங்களைவிட
கொடுக்கும் கரம் உயர்ந்தது
பொன்னாக சேர்த்து
பூட்டி வைக்காதே
மண்ணை வாங்கி
பயிரிட்டு உணவளி
நான் நிரந்தர இடமற்றவன்
சிறைபிடிக்க முயலாதே
உண்ணும் உணவு
அமிர்தமானால் உடலுக்குகேடு
தேங்கிய நீரும்
சீழ் துறுநாற்றமாகும்
என்னை ஆளநினை
உன்னை ஆளவைக்காதே
உள்ளத்தில் அமைதியற்ற
தருணமே மிஞ்சும்

ஒரு பெண்ணின் தாகம்

உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......

வெறுக்கவே முடியாது

எவ்வளவுதான் நம் மனம் காயப்பட்டாலும்....

நாம் நேசுத்த ஒரு இதயத்தை மட்டும்,

என்றும் நம்மால் வெறுக்கவே முடியாது...!

நட்பின் நினைவுகள்

பள்ளி மதிலுக்குள்
முதல் சந்திப்பில்
தளிரிட்ட உறவு
ஊர்த்தெருக்களில்
நித்தமும் துடர்ந்த
விளையாட்டு தருணங்கள்
கூட்டளியைத் தேடிய
வீட்டு தரிசனம்
இவன் என் சேக்காளி
உறவுகளிடம் அறிமுகம்
வரவுகள் தொடர்ந்த
இரு வாசல்கள்
நல்லுறவை பிணைத்தது
பால்ய நாட்களில்
நித்திரைகளில் மட்டும்
தனிமைகளின் வரவுகள்
உறவுகளின் நிகழ்ச்சிகளில்
உரிமைப் பங்கெடுப்பு
சின்னசின்ன சண்டைகள்
உறவுகளின் சமரசம்
பட்டியலில் அடங்காத
வரவும் செலவும்
காலத்தின் ஓட்டம்
தூரப் பயணங்கள்
கடித இணைப்பு
வருஷங்களின் இடைவெளி
ஓர் இரு சந்திப்பு
வரம்பற்ற கும்மாளத்துடன்
சுற்றித்திரிந்த நாட்கள்
மனப் புத்தகத்தில்
அழகிய குறிப்பு
நாட்களை தின்ற
வாழ்க்கை பயணம்
கடந்து செற்றது
விசித்திர முகங்கள்
பக்குவ பெட்டியில்
அனுபவங்களின் சேகரிப்பு
சிறிது சிறுதாக அகன்று
பிரித்தக் காட்டியது
நட்பையும் காதலையும்
பெண்மையின் வரவு
புதிய துணை
மணப்பந்தல் வழி
குடும்ப பயணம்
உழைப்பைத் தேடியும்
உறவை பேணியும்
நிற்காத ஓட்டம்
இளைப்பாறும் தருணம்
அவ்வப்போது வந்துபோகும்
பால்ய நட்பின் நினைவுகள்

ஏழைத் தாய்

வறுமையால்
உணவின்றி பசியால்
வாடுகிற பிள்ளைகளுக்காக
வாரிசற்ற செல்வந்தர்களுக்கு
தன் வாரிசுகள்
உயிர்த்தெழுந்த கருவறையை
இரவல் கொடுக்கிறாள்
ஏழைத் தாய்

உயிர் தவம்

தோழியை செல்லமாய்
அழைத்தபடி பவ்வியமாக
என்னை கடந்துசெல்கையில்
தலை தாழ்த்திய
ஓரப் பார்வையாலும்
சிவந்த இதழ்களின்
சிறு புன்னகையாலும்
மலர் முகத்தின்
வெட்கத்தாலும் என்
ஆயுளின் நாழிகைகள்
நித்தமும் புத்துயிர்பெற
நீ கல்லூரி சென்றுவரும்
பேரூந்து நிறுத்தத்தில்
தவம் கிடக்கிறேன்

பொறுமையின் எல்லை

பொறுத்த பூமி
வெறுத்தே விரிந்ததோ?
... பூகம்பம் ...

பெண் நிறங்கள்

*இருள் சூழ்ந்த
நான்கு சுவருக்குள்
மின்மினி வெளிச்சத்திற்கும்
கூட வெட்கப்பட்டு
கட்டிய கணவனுக்கு
மூடிய போர்வைக்குள்
உறவைப் பரிமாறும்
பெண்


*மணமாகும் முன்னே
கற்ப்பு களவாடப்பட்டதால்
சுருக்கு கயிற்றில்
உயிரை மாய்க்கும்
பெண்


*மனம் காதலனிடமும்
உடல் கணவனிடமும்
கட்டாய சூழ்நிலைகளில்
வாழ்க்கை நடத்தும்
பெண்


*இறந்தகணவனுக்கு பகரமாக
மாற்றானை அனுமதிக்காமல்
கருவறையை அறுத்தெறிந்து
நடைபிணமாக வாழும்
பெண்


*முக சித்திரத்திற்காக
வார இதழ்களில்
அட்டைப் படமாக
அரை நிர்வாண
சித்திரக் காட்சியளிக்கும்
பெண்


*பணத்திற்கும் புகழிற்கும்
கலைப் பெயர்களில்
ஆடைப் பஞ்சத்தில்
திரையில் தோன்றுகிற
பெண்


*எண்ணற்ற விழிகள்பார்க்க
ஒரு அங்குலத்துணிகளில்
வெட்கத்தலங்களை மறைத்து
அழகி மேடைகளில்
அன்ன நடையிடும்
பெண்


*வெறும் பணத்திற்காக
நீலச் சித்திரங்களில்
உல்லாசக் காட்சிகளுக்கு
ஆடை கழற்றும்
பெண்

அனுபவித்து வாழ்வோம்

வெற்றுடலாய் வந்தோம்.....
வெறுமையாய் செல்கிறோம்.....
தேடிச் சென்றதும்
நாடி வந்ததும்
சொந்தம்கொண்டாடியதும்
உறவற்று நிற்கிறது
வாழ்க்கை பயணத்தில்
கண்ணீரும் புன்னகையும்
நம்மை வழிநடத்துகிறது
ஜனனமும் மரணமும்
ஒருமுறை தான்
மேலவன் எழுதியதை
திருத்துவோர் யாருமில்லை
இரு கருவரைக்கான
வாழ்க்கை தருணங்களில்
அனுபவித்து வாழ்வோம்
சொந்தமென்று ஒன்றுமில்லை
கடவுள் தந்த
வாழ்க்கையைத் தவிர
வெற்றுடலாய் வந்தோம்
வெறுமையாய் ......

படித்ததில் பிடித்தது...

நீ எப்போதும் தலையை குனிந்தே வெட்கப்படுவதால்
உன் மதிப்பு மிக்க வெட்கத்தை எல்லாம்
இந்த பூமி மட்டுமே தரிசிக்க முடிகிறது.

ஒரே ஒரு முறை தலையை நிமிர்த்தி
வெட்க படேன்...

வெகு நாட்களாய் உன் வெட்கத்தை
தரிசிக்க துடிக்கிறது
வானம்.

வெளிநாட்டு வேலை

உறவுகள் தொலைத்து
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்

இதுவும் காதல் தான்! 1

காதலால் தான் மேதினி இயங்கும்!
ஆதலால் காதல் வாழட்டும்
காதல் தினமும் வாழட்டும்
காதல் தின வாழ்த்துக்களே!

ஓடுகின்ற பேரூந்தில்
நாடுகின்ற கண்களால்
பாடுகின்ற பல்லவிகளும்
காதல் தான்!

நெரிசலின் இடையினில்
கரிசனமாய் கண்களும்
தரிசனம் கொள்வதால் - தாளாது துடிப்பதும்
காதல் தான்!

இதுவும் காதல் தான்! 2

முன்வீட்டினில் மாலினியை
பின்வீட்டினில் பிருந்தாவை
எந்நேரமும் கண்ணடிப்பதும்
காதல் தான்!

குறுக்கிடும் அழைப்பினில்
திடுக்கிடும் தேன்குரலால்
பளிச்சிடும் பகற்கனவுகளும்
காதல் தான்!

எத்தனை ஆண்டுகள்
பத்தெனக் கழிந்தாலும் - காத்திருந்து
சித்திரத்தாள் கரம்பிடித்தலும்
காதல் தான்!

குணமென்ன குணம் பணந்தான் குறியென
தினம் தினம் மாறிடும்
அணங்குகள், ஆடவரை அலையவே வைப்பதும்
காதல் தான்!

இதுவும் காதல் தான்! 3

கரம் பிடிப்பேன் கண்மணியே
கணமும் ஓதுபவன்
கடல் கடந்ததுவும் கட்சிகள் மாறுவதும்
காதல் தான்!

கணனியில் கருத்துகள்
பிணைந்ததே! பிரிவதேன்? - இணையத்தில்
இணைந்திடும் இதயங்கள்
இனிமையில் திளைப்பதும்
காதல் தான்!

எந்தனது உள்ளமோ
இதமாய் இயம்புவதோ
கவிதை சமன் காதல்!
காதல் சமன் கவிதை!
இதுவும் காதல் தான்!

No comments:

Post a Comment