Monday, April 4, 2011

NARIYAMANGALAM, SURESH.G: காதல் அழுவதற்கு

NARIYAMANGALAM, SURESH.G: காதல் அழுவதற்கு

வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…

மேல் இதழ் முதல்வரி கீழ் இதழ் மறுவரி உன் இதழ்கள் எனக்கான இருவரி கவி * நீ அழகுக்கான அளவுகோல்! * கவிதைகளில் உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன் உன்னழகை எழுதும் வேளைகளில். * தூண்டிவிடுவது என்னவோ உன்னழகு பழி மட்டும் என் மேல். * கைகட்டி அமர்ந்திருக்கிறாய் நல்ல பிள்ளையாய்; உன் அழகு போடுகிறது குத்தாட்டம்! * நான் கொள்ளை அடிக்க அடிக்க கொஞ்சமும் குறைவதில்லை உன்னிடம் அழகு… * உன் அழகுக்கு அழகுகூட்ட முகப்பூச்சு ஏதும்

விரல் மொழி…

விழி மொழிகளையே இன்னும் மொழிபெயர்த்து முடியவில்லை அதற்குள் ஆரம்பித்துவிட்டாய் விரல் மொழி பேச!

தொட்டு வழியும் மழைத் துளி…

அவளை தொட்டு வழியும் ஒவ்வொரு மழைத் துளியும் விழுகிறது அவளாகவே

காதல் பாடம்

உன்னை மறக்க முயற்சித்து
தோற்ப்போனதில்த்தான்
கற்றுக்கொண்டேன்

உன்னை நினைத்து வாழ்வது
எப்படி என்று

என் கிறுக்கல்கள்

உன்னைப் பற்றி
எழுதியே
கவிதையாகி விடுகிறது

என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும்


என் முதல் கவியை
நினைக்கும்போதெல்லாம்
நான் மறப்பதில்லை
உன் முதல் முத்ததை


என்னை கிறுக்கனாக்கிக்
கொண்டிருக்கிறது உன்னை
பார்த்த என் கவிதைகள்


நீ மிக
அழகானவள்
என்பதற்கு

உன் மேல்
பொறாமைப்படும்

என் கிறுக்கல்
ஒன்று போதாதா


னக்கான உன்னை
எப்படியாவது
மிஞ்ச வேண்டும் என்பதே
என் கவியின் தவம் ..


எனக்கான கவி நீ *3*

ஆடைக் கடைகளுக்கு

அடிக்கடி செல்லாதே

உன்னைக்

கட்டிக் கொண்ட ஆடை மீது

கண் வைக்கிறது புத்தாடைகள்

*

நீ சூடி எறிந்த
வாடிய பூவில்

பூத்துக் குலுங்குகிறது
கூடவே விழுந்த

உன் கூந்தல் முடி
இரண்டும்

அன்புள்ள அம்மாச்சி….!

நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்

நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்

*

இறைவனிடம் வரம்
கேட்டேன்

அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து

தானே என்
மனைவியானான்

*

எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்

நான் உன்னைத் தேடி
வருவேன்

*

என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது

என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்

கவிதையானது
என் வாழ்க்கை

விசித்திரமானவளே…

கும்பாபிசேக மேளச்சத்திலும்
அமைதியாய் இருக்கும்
சாமி போல
அடக்கம் உனக்கு

எப்படி
நாதஸ்வர இசைபோல
வாசித்தாய் உன் காதலை

*

அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்

எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு

*
பொறுக்கவே
முடியவில்லை

என் மறதிகளை

நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்

அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்

*

பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்

*

வெக்கப்படுவதற்காகவே
சேலை கட்டும் பெண்கள்
மத்தியில்

வெக்கத்தையே ஆடையாய்
கட்டியிப்பவள் நீ

கவி நீ…!

அன்று

உனக்காக எழுதிய

கவியெல்லாம்

இன்று

கிறுக்கலாய் தெரிகிறது

ஆனாலும்

இன்னும் நான்

எழுதாக் கவி நீ

காகிதத்தாள்

னக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ

தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை

————————-

காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை

————————

நீ
நல்லவளே இல்லை

பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்

———————–

உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது

தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று

காதல் கவி நீ…*2

பொய்யை அழகாய்
சொல்லத் தெரிந்தால்

அது கவிதை

கற்றுக்கொண்டேன்
உன்னிடம் நான்.

*

குழந்தையும்
உன் அழகும்
ஒன்றுதான்

ஏதாவது செய்து
எப்படியாவது
ரசிக்க
வைத்துவிடுகிறது.

*

எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்

உனக்கான கவிதை
என்னுள்
உறங்கிக் கொண்டிருக்கிறது

*

நீ
எழுதிய

அழகான
கவிதை

கிறுக்கலானது

உன்
கையொப்பம்
கவிதையானதால்

காதல் கண்ணீர்

என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்

என்னை
கொண்றிருந்தால்

என்
பிணத்தை

நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது

*

என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது

கற்றது காதலை…!

சேற்றில்
விழுந்தாலும்

காதலில்
விழுந்திடாதே

உன் வீட்டில்
எல்லோரும்

தலை முழுக
வேண்டிவரும்

அடியே என் கவிதையே!

அடியே
என் கவிதையே
தோல்வியில் பிறந்தவளே
அடங்கடி கவிதையே!

உனைப் பாடையில் போகச் சொன்னால்
எனைக் கூட வரச் சொல்லுறியே!

கவி பிறக்கவில்லை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?

காகம் கரையும் போதும் பிறக்கிறாய்…
குளியலறையிலும் பிறக்கிறாய்…
தூங்கும் போதும் பிறக்கிறாய்…
விழிக்கும் போதும் பிறக்கிறாய்…
விட்டால் மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல் இருக்கிறது.

அவள் எனை விட்டுப் பறந்தாள்
அதனால் நீ எனக்குள் பிறந்து
எனை வருத்துகின்றாயே!

என்ன பாவம் செய்தேனடி?
காதலித்தது தப்பா?
அவள் கை விட்டது தப்பா?
அவள் பிரிந்ததால்
நீ பிறந்ததுதான் தப்போ தப்பு

ஏன்டி அடை மழைபோல் அழுகிறாய்?
உன் சோகத்தைத் தெரிவிக்க எதற்கடி
என் பேனாவின் ஆயுளைக் குறைக்கிறாய்?
உனைக் கள்ளிப் பால் கொடுத்து
கொலை செய்ய
லஞ்சம் கொடுத்து
ஆள் தேடுகிறேன்
யாரும் கிடைக்கவில்லை
இதுவரை.

என்னடி முறைக்கிறாய்?
பிறக்கும் கவிதைகளை வெறுக்கும்
முதல்வன் நான் என்றா?

ஆமா…
வெறுக்கும் கடைசியவனும்
நான்தான்

போடி… போ!
அனாதை ஆச்சிரம கரங்கள்
ஆயிரம் போ!

உனைப் படித்து
வடிப்பார்கள் கண்ணீர்
எனைத் தேடி வந்தால்
உனை
எண்ணை ஊற்றி எரித்திடுவேன்.

போம்மா போ!
மறந்தும்
விலை போகாதே
எனைப் பிரிந்தவளிடம்

அவள் உனை
கசக்கி எறிந்திடுவாள்!

என் காதல் கவிதைகள்

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய

*

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*

நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*

வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*

உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்

முதல் காதல் கவிதைகள்

ல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.

முதல் காதல் மறப்பதும் இல்லை மறக்கபடுவதும் இல்லை

மிதமான குளிரில் பருகக் கிடைக்கும் ஒரு கோப்பைத் தேநீர் போன்றது காதல். அதன் சுகம் அலாதியானது. அதிலும் முதல் காதல்? வாழ்வின் விளிம்பு நிலை வரை நம் மனதை விட்டு அகலாத ஒரு சுகமான சுமை அந்த முதல் காதல். இந்த ஓராண்டுக் காலம் ஓரளவு நிம்மதியாய் வாழ்ந்து விட்டு வாருங்கள் உங்களை பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று விதி எங்களை வழியனுப்பி வைத்த காலம் அது. மேலிதழின் மேற்புறம் அரும்பும் மீசையோடு, சக வயது பெண்களை கண்டால் உள்ளுக்குள் ஏதோ வலி ஏற்படும் பருவம் அது.

முதல் காதல் மறப்பதும் இல்லை
மறக்கபடுவதும் இல்லை
மறந்து விட்டேன் என்பவர்களெல்லாம்
மாகா நடிகர்கள்

காதல்

காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம.
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - ஹோமோசேபியனின் முதல் கவிதை.
காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.
காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.

அன்று முதல் இன்று வறை என் காதல் தோற்றதில்லை

உல்ல ஒறே ஒரு வித்தியாசம்
ஆணுக்கு மீசை இருக்கும்
பெண்ணுக்கு மீசை இருக்காது
இதுதான் எனக்கு தெரிந்த
ஒறே பாலியல் வேற்றுமை

ஐ டொனோ டமில் ”

கஸ்டப் பட்டு
மூலையைக் கசக்கி
உட்காந்து , படுத்து , நடந்து
யோசிச்சி

சுட சுட
காமத்துப் பால் கலந்து
சுந்தர தமிழிலே
உனக்காக கவிதை எழுதி

யாருக்கும் தெரியாம
கையில் குடுத்தா
“ ஐ டொனோ டமில்னு ”
சொல்லிட்டியே பக்கி

உண்மையில் பிறிதலே காதலை சொல்லும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

முட்டி மோதி
கட்டிப் புறல்கயில்
வழியாதக் காதலை
புறியாதக் காதலை

அவளைப் பிறிந்த
நொடியினில் அறிய தொடங்குவாய்
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

அவளைப் பிறிந்ததும்
அவளோடு சேர்த்து
உன் மனதையும்
துளைத்ததை உனர்வாய்

இல்லாத மனது
கனக்கக் காண்பாய்
இதய துடிப்பு
மெதுவடையும்

உயிருடன் இருக்கின்றாயா
என்று சோதனை செய்வாய்
நடமாடும் பினமாவாய்
பேசும் ஊமையாவாய்

நீ ஆனா என்றும் – உனக்கே
சந்தேகம் வரும்

அவளைப் பிறிந்ததும்

முதலில் கவிஞனாவாய்
ஆனால் கவிதை எழுத வராது
உன் கிருக்கல்களை கவிதை என்பாய்
கவிதைகளை கிருக்கல்கள் என்பாய்

உன் மூலையோ
எல்லாம் ஹார்மோன்களின் சேட்டைகள்
அவளை மறந்திவிடு
என்று மந்திரம் ஓதும்

உன் மனதோ
அவளே உனக்குள்ளே
ஓடும் உயிரென்றுக்கூறும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

இதுதால் காதலா என
உன்னையே நீ கேற்பாய்
உன்னையும் நம்பாம்மல்- உன்
நண்பனையும் கேட்ப்பாய்
ஆம் என்று பதில் வரும்

உன் கனவிலாவது
அவள் வரமாட்டாளா என
தினம் எதிர்ப்பார்த்து உறங்கச்செல்வாய்- ஆனால்
ஏமாற்றத்துடன்எழுவாய்

எதிர்ப்பாராமல் அவளைக்
காண மாட்டோமா என்று
எதிர்ப் பார்த்தே செல்வாய்

அவள் வீட்டின் நாயாவாய்
அவள் தெருவின் காவலனாவாய்
அவள் வளர்க்கும் ஆடும் மாடும்- உன்
உற்ற நண்பனாகும்

அவளுக்காக நடந்தே
உடல் இளைப்பாய்
உன்னோடு சேர்ந்து- உன்
செருப்பும் இளைக்கும்

அவள் உனக்கில்லை
என்றுத் தெரிந்தாலும்
அவளேக் காதலி
அவளைக் காதலி

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

எனக்கு சுதந்திரம் வேண்டாம் !

பெண்ணே !
எனக்கு சுதந்திரம் வேண்டாம்
உண்மைதான் , சத்தியமாக
எனக்கு சுதந்திரம் வேண்டாம்

என்றும் உன் அடிமையாகவே
இருக்க விரும்புகிறேன்
நான் !

எனக்கு சுதந்திரம் வேண்டாம்

செருப்பு !

உன்னை தினம் சுமப்பதென்றால்
செருப்பாகவும் நான் பிறப்பேன் !

உலகில் எத்தனை கடவுள் இருந்தாலும் உன்னை பூமிக்கு தந்த உண் தாய் தான் என் முதல் கடவுள்..........

என் கண்ணுக்குள் நீ கருப்பு நிலவாக, என் மனசுக்குள் நீ, இதய நிலவாக....

கடவுள்

உலகில் எத்தனை கடவுள் இருந்தாலும் உன்னை பூமிக்கு தந்த உண் தாய் தான் என் முதல் கடவுள்..........

நினைவுகள்

தோ எதோ நினைவுகள் நான் உன்னுடன் வாழ வேண்டும் என்ற கனவுகள், அன்பு
காட்ட நீயில்லை அன்போடு வாழவே ஆசை

சந்தோசம்

வீட்டில் நடக்கும் சோகங்களையும் மறந்து விடுகிறான் உன் நினைவுகளில்........

இறந்துபோன ஓர் உயிர் கவிதை என் காதலின் ஆத்மா............................


இறந்துபோன  ஓர் உயிர் கவிதை என் காதலின் ஆத்மா............................ - காதல் தோல்வி கவிதைகள்

இறந்துபோன ஓர் உயிர் கவிதை என் காதலின் ஆத்மா............................


போதையோ
தெளிந்து விட்டது
உன் காதலோ
பறந்து விட்டது

கனவோ
கலைந்து விட்டது
உன் நினைவோ
தொலைந்து விட்டது

உன் வார்த்தையோ
சுட்டு விட்டது
என் உடலோ
வெந்து விட்டது

கடலோ
அடங்கி விட்டது
அதில் என் உயிரோ
கலந்து விட்டது

மலரே
அழுது விடாதே
என் எதிரே
வந்து விடாதே

அந்த
கடல் அலையோடு
அலைந்து கொண்டிருக்கும்
என் காதலின் ஆயுள் முடியும் வரை
என் காதலின் ஆத்மா........................

இப்படிக்கு.............................உன்னவன்










காதல்

பார்த்தல், பேசுதல்
அணைத்தல், சுவைத்தல்
நீக்கியும் நினைத்தல்
நீடித்தல்

என்றும் பெண்ணுக்கழகு

திறந்த மனதும்
மூடிய உடலும்
திறந்த அறிவும்
மூடிய வாயுமே

Wednesday, February 16, 2011

சிவபெருமான் பற்றி ரகசியம்

சிவன் அவதாரம் எடுத்ததில்லை;தனது அம்சத்தை அனுப்பி அண்டங்களையும் பேரண்டங்களையும் பரிபாலனம் செய்பவர்.அவர் ஆணும் அல்ல;பெண்ணும் அல்ல;அலியும் அல்ல;சர்வ வியாபி.அணுவுக்கும் அணுவாக இருப்பவர்.அவர் ரூபம்,அரூபாரூபம்.அரூபம் என்ற மூன்று நிலைகளிலும் பக்தனின் பரிபக்குவத்திற்குத் தக்கபடி அருளுகிறார்.ஆனால்,அனைத்து மதங்களிலும் அவர் அருட்பெர்ருஞ்சோதி வடிவில் வணங்கப்படுகின்றார்.அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.அவரைப் பற்றிய அறிவைப்பெற இந்த சாதாரண மூளையால் சாத்தியப்படாது.யோகிகளும் பக்தர்களும் கூட அவரைப் பார்த்ததில்லை.அவரைச் சுற்ரி கோடிக்கணக்கான சிவபூத கணங்கள் அவர் ஏவலுக்காகக் காத்து நிற்கின்றன.அப்பூத கணங்கள் மூலமாகத்தான் பூமியில் வாழும் 84 லட்சம் ஜீவ ராசிகளுக்கும் ஆகாரம் அளிக்கிறார்.அவரது எளிய வடிவமே பைரவர்.வீட்டில் வைத்து வழிபட ஏற்றவர் சொர்ண பைரவர் தான்.

மாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்

மாசி மாதம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள்,மனித வடிவில் பறந்து வருவர்.ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும்.இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களின் பிரச்னைகள் அடுத்த சில மாதங்களில்(அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.இந்த ஆண்டு,மாசி மகம் எனப்படும் மாசி பவுர்ணமி 17.2.2011 வியாள க்கிழமையன்று வருகிறது.

நீதித்துறையில் இருப்பவர்கள்,நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும்,சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம்,நியாயம்,சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும்,விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும்,மின் அணுத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும்.

பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமியன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒருமுறை மாசிமகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.

கலப்படம் செய்பவர்கள்,கொடுத்த கடன்கள் திருப்பி வராததால் நொடித்திருப்போருக்கு அவர்களின் சொல்ல முடியாத முன் ஜன்மவினைகளே காரணம்.அந்த முன் ஜன்ம வினைகள் நீங்கவும்,பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும் ,குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமியன்று 17.2.2011 வியால க்கிழமையன்று திரு அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!!

அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!