Tuesday, November 16, 2010

நான்கு வரிக் கவிதைகள்


நான்கு வரிக் கவிதைகள்

Post

அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான்
அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான்
அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான்
அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா



கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது
சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது
பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான்
துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது




ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது
ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார்
கோவிலுக்கு போனால் நீ ஆத்திக நாய் - பகுத்தறிவு எனக்கு
சாய்பாபாவுக்கு பாராட்டு விழா நேரமாச்சு போக



அண்ணி சீரியலில் அம்பிகா எதிர்த்தவீட்டு ராமோட ஓடிப்போயிட்டா
சித்தி சீரியலில் சிந்துஜா ரவியை வெச்சிருக்கா
மலர்கள் சீரியலில் மாளவிகா மதனோட கள்ளத் தொடர்பு
கொஞ்சம் ரிக்கார்ட் பண்ணுங்க சுமங்கலி பூஜைக்கு நேரமாச்சு


நான்கு வரிக் கவிதைகள்

Post

கதை எழுதுவாரு அண்ணாதுரை, வசனம் எழுதுவாரு கலைஞரு
ராஜபாட்டைக்கு ஒரு எம்ஜிஆர், ஹீரோயினியா ஜெயலலிதா
நகைச்சுவை நடிகரு நம்ம சோ, ரீலிஸ் பண்றவரு வீரப்பன்
ஸ்டைலுவுட விசயகாந்து, சே, கூத்தா போச்சுடோய் அரசியலு



பசிக்கிறது சாப்பாடு போடுங்கய்யா சொன்னவனை ஒன்னும் இல்லைப்பா என்று சொல்லி ஓட்டினேன்
கடைதெரு போகும் வழியில் ஆட்டோக்காரனிடம் 5 ரூபாய்கக்கு அரை மணி சண்டை போட்டேன்
ஓட்டலில் சர்வர் கொண்ட வந்த பில்லை டிப்ஸ் மிச்சப்படுத்த எடுத்து சென்று கல்லாவில் பணம் கட்டினேன்
ஓடிச்சென்று போத்தீஸில் கைக்குட்டையை அவன் போட்ட 150 விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி வந்தேன்




ஓட்டுப் போட்டு உதை வாங்கி ஓடிவந்து
நாட்டு வெடிகுண்டை வைத்து நாட்டுப்பற்றை காட்டி
நாலு நாள் ஆஸ்பத்திரியில் அவதி பட்டு
மறுதேர்தல் அறிவிப்பை பார்த்து காயத்தை தடவிக்கொண்டேன்




திமுகவை சாடினேன் அதிமுகவை ஏசினேன்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசவு செய்தேன்
பொறுப்பற்ற மந்திரிகளை பொரிந்து தள்ளினேன்
தேர்தல் நாளு லீவு தானே என்று படுத்து தூங்கினேன்
நிறுவனர்
நான்கு வரிக் கவிதைகள்




குமுதத்திற்கு நமீதாவின் இடுப்பு மட்டும் கண்ணுக்கு படுகிறது
ஆனந்த விகடனோ கருணாநிதியின் மஞ்சள் துண்டை மட்டும் எடுக்கிறது
கல்கியோ பதினெட்டாம் நூற்றாண்டை விட்டு வெளியே வர மறுக்கிறது
திரும்பி வந்த கதைகளால் என் வீட்டு கொல்லைபுறம் பெருக்கிறது



மட்டமான சாராயத்தை குடித்த வயிறு எரிந்து மல்லாக்கப்படுத்தேன்
சுருட்டு பீடியும் புகைத்து வாய் நாறிப்போனேன்
விளக்கு வைத்து தோரணம் கட்டி போஸ்டர் ஒட்டி பிசுபிசுத்துப்போன கைகள்
என் கைபட்டதும் டெட்டாலால் கழுவும் தலைவனுக்காக தீக்குளிக்க போகிறேன்




ராகுகாலம் பார்த்து வீட்டிலிருந்து கிளம்பி பரீட்சைக்காக
வழியில் இருந்த முருகன் கோயிலில் வணக்கம் போட்டு
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தாளில் ஓம் போட்டு
மதிப்பெண்ணை பார்த்தால், சே, சரியான ராகுகாலத்தில் பேப்பர் திருத்தினாங்கப்பா



அன்பை அன்னைக்காக கொடுத்தேன் அறிவை தந்தைக்கு சமர்ப்பணம் செய்தேன்
பாசத்தை சகோதரனுக்கு கொடுத்தேன் நேசத்தை சகோதரிக்கு கொடுத்தேன்
விசுவாசத்தை நண்பர்களுக்கு கொடுத்தேன் காதலை காதலிக்கு கொடுத்தேன்
எனக்கென்று வரும்போது கொடுக்க ஏதும் இல்லை, அநாதையாய் நின்றேன்




மேளம் கொட்டுபவனிடம் சென்று ஒலி மாசு பற்றி பேசினேன்
செருப்பு தைப்பவனிடம் சென்று பசு வதை பற்றி பேசினேன்
ஊமையனை பேச்சாளனாக சொல்லி, குருடனுக்கு கண்ணாடியும் வாங்கினேன்
அரசியல்வாதியை நேர்மையாக சொன்னேன், கீழ்பாக்கத்தில் இருக்கிறேன்

சுரேஷ்

No comments:

Post a Comment